29 Oct 2013

சரவணன் - நாணல் காடு

             சரவணன் என்ற பெயர் தமிழ் கடவுளின் பெயர் (போலவும்), Modern ஆகவும் இருப்பதால் அந்த பெயரை வைத்துக்கொள்கின்றனர். ஆனால் உண்மையில் சரவணன் என்ற பெயருக்கு பொருள் என்னவென்று பார்த்தால் சற்று வித்தியாசமானதாகவே தோன்றுகிறது. சரவணன் என்ற சம்ஸ்க்ருத பதத்திற்கு நாணல் காடு என்று பொருள். சர: (शरः) - நாணல், கோரைப்புல் (அம்பிற்கும் சர: என்ற பொருள் உண்டு.) வனம் (वनम्) - காடு. அதாவது நாணல்புல் நிறைந்த காடு என்ற பொருளில் உள்ளது. அப்படியானால் முருகனுக்கு சரவணன் என்ற பெயர் எவ்வாறு பொருத்தமாகும்? உண்மையில் முருகனுக்கு சரவணபவ (शरवणभवः) என்றல்லவா பெயர். சரமென்றால் நாணல், வனம் என்றால் காடு, நாணல்காட்டில் இருப்பவன் (அல்லது பிறந்தவன்)  என்ற பொருளில் முருகனுக்கு சரவணபவன் என்ற பெயர் உண்டானது. சிற்றுண்டிசாலைகள் அந்த பெயரை ©, ® வாங்கியதால் என்னவோ அதை பெயராக வைக்காமல் சற்று சுருக்கி பெயரை வைத்துக்கொள்கிறார்களோ என்னவோ.ஆனால் சிற்றுண்டிசாலைகளின் பெயர்களில் உள்ள 'பவன்' என்ற சொல் பவனம் - இருப்பிடம் என்ற பொருளில் உள்ளது. எனவே பொருளறிந்து பெயர் வைப்பது நன்று...


No comments: