12 Dec 2014

ஸம்ஸ்க்ருதம் ஏன்...?

ஸம்ஸ்க்ருதத்த கத்துகிட்டு / ஸம்ஸ்க்ருதத்துல என்னவெல்லாம் இருக்குது னு தெரிஞ்சிகிட்டு அப்றமா அத எதிர்ப்பதா வேண்டாமாங்கறத பத்தி யோசிக்கலாம். தமிழ்நாட்டுல அரசுப் பள்ளிகளிலும், ஆங்கிலப்பள்ளிகளிலும் படிச்சுட்டு வந்த Studentsகிட்ட ஸம்ஸ்க்ருதம் னா என்ன னு கேட்டேன். ஒரு சிலர் கோவில் ல பூசாரி சாமிக்கிட்ட சொல்ற மந்திரம் னும், ஒரு சிலர் அப்டினா என்ன னே தெரியாது னும் சொன்னாங்க. நம்ம தமிழ்நாட்டுல ஸம்ஸ்க்ருதத்தப் பத்தின அறிவு அவ்ளோதான். ஏன் னா பல காரணங்களாலும் அதத் தாண்டி ஸம்ஸ்க்ருதத்துல இருக்கற விஷயங்கள தெரிஞ்சிக்க(விட)ல. தற்போதுள்ள காலகட்டங்கள்ல ஸம்ஸ்க்ருதத்துக்கு இருக்கற அரசியல் (பிழைப்புகளை) எதிர்ப்புகளை கண்கூடா பாக்கமுடியுது. எதுக்காக இவங்க எதிர்க்கராங்க னு முழுமையா தேடிப்பாத்தா 'வெங்காயம்' மாதிரி கடைசியில காரணமே சரியானதா தோனல. உண்மையிலேயே தமிழும் ஸம்ஸ்க்ருதமும் அப்படியொரு பிணைப்புகளால் இணைந்தது. ஸம்ஸ்க்ருதத்துல ஆயுர்வேதம் தான் தமிழ்ல சித்தமருத்துவம், ஸம்ஸ்க்ருதத்துல நீதிநூல் தான் தமிழ்ல திருக்குறள், இப்படி ஸம்ஸ்க்ருதத்துல இருக்குற பலவிஷயங்கள் தமிழ்ல இருக்கு. 
எனக்கு தெரிஞ்சவரைக்கும் ஸம்ஸ்க்ருதம் 'பேசற' ஒருத்தரும் தமிழ் தாழ்ந்ததுனோ, அத அழிச்சுட்டுதான் ஸம்ஸ்க்ருதம் இருக்கனும் னோ எண்ணம் ஒருபோதும் கொண்டது கிடையாது. எனக்கு கமல் பிடிக்கும், அதனால ரஜினிகாந்த பிடிச்சவன்லாம் எதிரி ங்கற பார்வைல பாத்தா அப்டிதான் இருக்கும். உண்மையிலேயே கமலும் ரஜினியும் சிறந்த நண்பர்கள்தான் (எடுத்துக்காட்டுக்காக சொன்னேன். உங்களுக்கு பிடிச்ச நடிகரையும், பிடிக்காத நடிகரையும் போட்டு பூர்த்திசெஞ்சுக்கோங்க). அதுபோலதான் அரசியல் ஆதாயத்துக்காகவோ அறியாமையாலோ இரண்டையும் ஒரே வேராக பார்க்காமல் வேறாகப் பார்த்து நம்மை பல காலம் மடைமையில தள்ளிவிட்டுட்டாங்க. ஒரு பதிவுல 'ஸம்ஸ்க்ருதம் படிச்சு கோவில் ல தட்டு தூக்கவா போறேன்'னு போட்டிருந்தார். எப்படி தேவாரம், திருவாசகம் லாம் தமிழ் ல இருக்கோ அதுமாதிரி வேதத்துல ஒரு சிறுபகுதிதான் கோவில்கள்ல சொல்ற மந்திரங்கள். அதுமட்டுமே ஸம்ஸ்க்ருதம் அல்ல. அதுவும் ஸம்ஸ்க்ருதம். அவ்ளோதான். அந்த பதிவுல மற்றொரு பார்வை 'தட்டு தூக்க'னு சொன்னா இறைவனுக்கு பூஜை செய்ற புண்ணியகாரியத்தை செஞ்சு கிடைச்சத மட்டும் வெச்சுகிட்டு இறைப்பணியே போதும் னு நினைச்சு வாழற அந்த அந்தணர்களுக்கு நம்மால முடிஞ்சத கொடுத்து உதவறோம். அதன்றி பேச நாக்கு இருக்குனு எல்லாரையும் துச்சமா நினைச்சு பேசுறது எந்த அளவுக்கு மனிதத்தன்மையைக் காட்டும் னு தெரியல. 
சரி. பூஜைக்கு மட்டுமே இருக்கும் மொழி அல்ல ஸம்ஸ்க்ருதம். தமிழ் மாதிரி அதுவும் எல்லா பண்புகளையும், பண்பாடுகளையும் கொண்டதுதான். மருத்துவம், வானிலை, விமானம், அகழ்வு, பூகோளம் என கணக்கிலடங்காத பல விஷயங்கள் ஸம்ஸ்க்ருதத்துல இருக்கு. மந்திரங்கள் கோவில்ல உச்சரிக்கமட்டுமே. அதைத்தாண்டி பஞ்சகாவ்யங்கள் (தமிழ் ல ஐம்பெருங்காப்பியங்கள் னு சொல்றோமே அதுதான்), பல நாடகங்கள், பல புராணங்கள் னு சொல்லமுடியாத அளவுக்கு விஷயங்கள் அடங்கி இருக்கு. ஸம்ஸ்க்ருதத்துல இருக்குல பல்லாயிரம் விஷயங்கள் இன்னும் வெளிகொணறாமலேயே இருக்கு.
மற்றுமொரு அறியாமை - ஸம்ஸ்க்ருதத்த ஒரு சிலர்தான் படிக்கலாம் னு சொல்லி இருக்கறாங்க. அதுனால நாங்க படிச்சு என்ன பண்ணப்போறோம் னு கேட்கறவங்களுக்கு பதில் சொல்றேன். இப்ப சொன்னேனே கோவில் ல சொல்ற மந்திரம் னு அத எல்லாரும் படிக்கறுங்கறது நமது உடல் அமைப்பு மற்றும் வாழும் முறைப் படி கொஞ்சம் கடினமானது. ஏன்னா அதுக்கு ஸம்ஸ்காரங்கள், நியமங்கள் னு எக்கச்சக்கம். அதனாலதானோ என்னவோ எல்லாரும் படிக்கவேண்டாம் னு சொல்லி இருக்காங்க. மந்திரங்கள் ல ஸ்வரங்கள் னு ஒரு விஷயம். சங்கீதத்துல இருக்குற மாதிரிதான். அதுல ஒரு ஸ்வரம் தப்பினாலும் பாபம் வரும் னு சொல்லி இருக்கு. சிறுபிழை வந்தாலும் பெரிய அளவுக்கு பொருள்மாறுபாடு வற வாய்ப்புகள் நிறைய. அந்த Risk எடுக்கனும் னா மேற்குறிப்பிட்டபடி வாழ்க்கைச் சூழ்நிலைகளை அமைச்சுக்கனும். அத எல்லாராலும் பண்ண முடியாதனால அதற்கேற்றவங்க பண்ணிகிட்டு வந்தாங்க / வர்றாங்க. எல்லாரும் பூசாரியாக முடியாதுங்கறதுக்கு இதுதான் காரணம்.
அதனால, இதுமட்டும்தான் ஸம்ஸ்க்ருதம் னு கிடையாது. ஒரு சிறுபகுதிதான் இது. இதைத்தாண்டி விஞ்ஞானமும், இலக்கியமும், மருத்துவமும் குவிஞ்சிகெடக்குது. இதப்படிக்க முன்னாடி சொன்ன ஸ்வரம் முக்கியமில்ல. சொல்லுக்கு பொருள் தெரிஞ்சா போதும். இத யார் வேணாலும் படிக்கலாம். என் கூட கல்லூரில படிச்சவங்கள்ல (M.A., M.PHIL, B.ED ஸம்ஸ்க்ருதம்) 85 சதவீதம் பேர் பிராமணர் அல்லாதவர்களும், அரசின் உதவித்தொகை பெரும் குலத்தைச் சார்ந்தவர்களும் தான். ஸம்ஸ்க்ருதத்திற்காக இருக்கும் பல்கலைக்கழகங்களில் படிப்பவர்கள் பெரும்பாலோர் பிராமணர் இல்லாதவர்களே. இவர்களில் பெண்களும் அடங்குவர். அப்படி பாத்தா, அவங்கள்லாம் என்ன தட்டு தூக்கவா போறாங்க?!
ஸம்ஸ்க்ருதத்த எதிர்க்கனும்னு தோணுச்சுனா முதல்ல சொல்றது செத்த மொழி, பேச்சு வழக்கில் இல்லாத மொழி. யோசிச்சு பாருங்க ஒரு காலத்துல பாரதம் முழுவதும் பேசப்பட்ட ஒரு மொழிய செத்த மொழினு சொல்ற நம்ம தமிழ காப்பாத்தாம, வளர்க்கவும் முயற்சிக்காம இருக்கோமே அத நினைச்சதுண்டா? இப்படியே இருந்தா இன்னும் 100 வருடங்கள் கழிச்சு ஆங்கிலேயனால் சொல்லப்படும் வார்த்தை TAMIL IS A DIED LANGUAGE. ஆனா, மொழி எப்போதும் சாகாது. ஸம்ஸ்க்ருதம் பேச்சுவழக்கில் குறைவேயன்றி இல்லாமல் இல்லை. மீண்டும் அதை புதுப்பிக்கவே மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஸம்ஸ்க்ருதத்தை திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ ஒன்றுமில்லை. தமிழ்போல் உள்ள ஸம்ஸ்க்ருதத்தை ஒருசேர கற்பதும், கற்பிப்பதும் நம் கடமையே.

No comments: